தண்ணீரில் மூழ்கி வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு (37) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாபு தனது நண்பரான கம்ப்யூட்டர் மெக்கானிக் உதயகுமார்(27), திருமாறன், மணி, கார்த்திக், செந்தில்நாதன் ஆகியோருடன் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். முதலில் உதயகுமாரும், பாபுவும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக் கொண்டனர்.
இதனை பார்த்த நண்பர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. சிறிது நேரத்தில் இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு உதயகுமார் மற்றும் பாபு ஆகிய இரண்டு பெரும் உடல்களையும் மீட்டனர். பின்னர் வாலிபர்களின் உடல் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.