680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று சேற்றில் விழுந்த குதிரையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர்.
கனடா நாட்டில் Edmoton பகுதியில் உள்ள ஒரு சேற்றுக் குழிக்குள் 680 கிலோ எடை கொண்ட குதிரை ஒன்று விழுந்துள்ளது. Fysik என்ற பெயர் கொண்ட அந்த 11 வயது குதிரை எதிர்பாராத விதமாக சேற்றில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து குதிரையின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களால் குதிரையை மீட்க முடியவில்லை.
இதையடுத்து பல லாரிகளை கொண்டுவந்து நிறுத்தி அதில் கயிறுகளை கட்டி அதன் மூலம் சேற்றில் சிக்கிய குதிரை இழுத்து வெளியே கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குதிரையின் உரிமையாளர் கூறுகையில், “என் குதிரையை நான் இழந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அது உயிர் பிழைத்து இப்போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குதிரையை காப்பாற்ற உதவிய வீரர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.