Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் அடுத்தடுத்து மோசடி…. ஆன்லைன் மூலம்… 1 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் யார்?… சைபர் கிரைம் போலீசார் விசாரணை…!!

ஆன்லைன் மூலமாக இரண்டு பேரிடம் ரூ 1 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி குழந்தைவேல்(54). இவருடைய செல்போனிற்கு தங்களுடைய நிலத்தில் செல்போன் டவர் வைக்க இடம் கொடுத்தால் அதிக பணம் கொடுக்கப்படும் என்றும், அதற்கு முன்பணமாக ரூ 51,000 கொடுக்க வேண்டும் என்று மெசேஜ் வந்துள்ளது.

இதை உண்மை என்று நம்பி குழந்தைவேல் ஆன்லைன் மூலமாக ரூ 51,000 செலுத்தியுள்ளார். அதன்பின் சில தினங்களுக்கு பிறகு காப்பீட்டிற்கு ரூ 50,000 கொடுக்க வேண்டும் என்று செய்தி வந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் சம்பந்தப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ 51,000 கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதேபோன்று சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதுடைய பிரவீன் குமார். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார். இவருடைய செல்போனிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜில் பிரபல கம்பெனி தயாரிக்கும் பென்சில்களை பேக்கிங் செய்து கொடுத்தால் மாதம் ரூ 25,000  வரை சம்பாதிக்கலாம் என்று  அனுப்பப்பட்டுள்ளது. இதை உண்மை என்று நம்பி முன்பணமாக மூன்று தவணைகளில் ரூபாய் 57,645 செலுத்தி உள்ளார்.

அதன்பின் அவருடைய செல்போனிற்கு எந்த தகவலும் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவர் அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் 2 பேரும் சேலம் சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ரூ 1,08,645 மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |