சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தையல் தொழில் கற்பதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் இந்த பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்திர தையல், துணி ஓவியம் ஆகிய இலவச பயிற்சி வகுப்புகள் 30 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தகவலை இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் லாலி காயத்ரி தெரிவித்துள்ளார். இதற்கு விருப்பமுள்ளவர்கள் நேரில் அணுகலாம்.
Categories