சேலத்தில் அரசு மருத்துவமனையில் இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து உபயோகத்திற்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து செலுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் உபயோகத்திற்கு இன்று முதல் ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய மருத்துவ ஆவணத்துடன் வந்து மருந்தினை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.