Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் சமையல் எரிவாயு வெடித்து….5 பேர் பலி…. பெரும் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பத்மநாதன். இவர் தீயணைப்பு துறை சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அவருடைய வீடு மற்றும் அங்குள்ள 5 வீடுகள் இடிந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர்.

இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காவல்துறையினர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேர்ந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |