சேலம் மாவட்டத்தில் 13¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது.
சேலம் மாவட்டம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து கலெக்டர் கார்மேகம் கூறியது , “சேலம் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று முதல் தொடங்கி உள்ளது.
இந்த முகாம் வருகின்ற 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் 26 ஆம் தேதி நடக்கிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களிலும் நடைபெறுகிறது.