Categories
மாவட்ட செய்திகள்

சேலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தீ விபத்து : அதிஷ்டாவசமாக தப்பித்த பயணிகள்!

சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்தி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பேருந்தினுள் அமர்ந்திருந்த 50 பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். பேருந்தில் இருந்து பயணிகள் வெளியேறிய சில நிமிடங்களில் இன்ஜினில் பற்றிய தீ பேருந்து முழுவதும் பரவியுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஓட்டுநர் கார்த்தி எடுத்த நடவடிக்கையால் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் சிவதாபுரம் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் பேருந்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறியது.

Categories

Tech |