Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயிலினால் அவதிப்படும் மக்கள்… கொட்டித் தீர்த்த கனமழை…. குளிர்ச்சியடைந்த பூமி…!!

சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் இரவு நேரத்தில் வெப்ப சலனத்தால் மக்கள் துங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 150 டிகிரி வரை  பதிவான நிலையில் திடீரென இடி மீன்னலுடன்  கூடிய மழை பெய்துள்ளது.

இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி பல இடங்களில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து ஓடியது . இதனையடுத்து இந்த மழை பெய்து வெப்பம் தணிந்ததால் தற்போது குளிர்ச்சியான நிலை இருக்கிறது என மக்கள் மகிழ்ச்சியடைந்துளனர்.

Categories

Tech |