Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து வாலிபர் கடத்தல்”…. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!

சேலத்தில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து வாலிபரை கடத்தி சென்றுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டைகோவில் பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூலாராம் என்பவர் சென்ற நான்கு வருடங்களாக சின்னகடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் ஜெயராம். இவர் நேற்று காலை கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபொழுது 6:45 மணிக்கு வேனில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சட்டையை பிடித்து வேனில் ஏற்றி கடத்திச் சென்றது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்கள். இதையடுத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்கள். இதனிடையே ஜெயராமின் தொலைபேசி எண்ணிலிருந்து மூலாராமுக்கு கால் வந்துள்ளது. அதில் அந்த கும்பல் 20 லட்சம் கொடுத்தால் மகனை விடுவிப்பதாக கூறினார்கள் என பேசப்பட்டது. மேலும் போலீசார் இதுகுறித்து விசாரனை செய்து வருகின்றார்கள். மூலாராம் மீது ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |