சேலம் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டையில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் அமைந்துள்ளது. இந்த வேளாண்மை விற்பனை சங்கத்திற்கு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிடப்பட்ட பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதில் டி.சி.எச் ரக பருத்தி வகைகள் 100 கிலோ 6 ஆயிரத்து 800 முதல் 9 ஆயிரத்து 139 வரையிலும், பி.டி ரக பருத்தி 100 கிலோ 5 ஆயிரத்து 19 முதல் 6 ஆயிரத்து 699 வரையிலும் மற்றும் ஒட்டு ரக பருத்தி வகைகள் 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 500 வரை ஏலம் விடப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு நடந்த ஏலத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 300 பருத்தி மூட்டைகள் , 1 கோடியே 10 லட்சத்துக்கு ஏலம் போனது என்று சங்க நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.