Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் மாயமான பள்ளி மாணவிகள்…. “அரசு பஸ் டிரைவரின் நல்ல மனசு”… கமிஷனர் பாராட்டு…!!!!!

சேலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மூன்று மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் மாணவிகள் மூன்று பேரும் வகுப்பறையில் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் போன்றோர் விசாரணை மேற்கொண்டு மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சேலம் மாநகரம் முழுவதும் போலீஸ் உஷார் படுத்தப்பட்டு மாணவிகள் எங்கு இருக்கின்றனர் என அவர்களை தேடுதல் வேட்டை நடைபெற்றுள்ளது. அந்த சூழலில் மாயமான மாணவிகள் மூன்று பேரும் ஓமலூர் பேருந்து நிலையம் பகுதியில் நிற்பதாக மாநகர போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து அங்கு மாணவிகளை பார்த்த அரசு பேருந்து டிரைவர் பெரியசாமி, கண்டக்டர் அன்பழகன் போன்றோர் சூரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் போலீசார்  வரும் வரையிலும் பத்திரமாக மாணவிகளை பாதுகாத்து அவர்களை மீட்க உதவியதற்கு டிரைவர், கண்டக்டர்களை  நேற்று போலீஸ் கமிஷனர் ஹோண்டா தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுடன் துணை கமிஷனர் மாடசாமி லாவண்யா, உதவி கமிஷனர் நாகராஜன் சரவணன்  உடன்  இருந்துள்ளனர்.

Categories

Tech |