Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் மூன்று தலையுடன் பிறந்த அதிசய கண்ணுக்குட்டி …!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு கறவைப் பசு ஒன்றை வாங்கி வளர்த்து வந்த நிலையில் அந்த பசு இன்று மூன்று தலையுடன் கூடிய அதிசய கன்று ஒன்றை ஈன்றது. பின்னர் சிறிது நேரத்தில் மூன்று தலையுடன் பிறந்த அந்த அதிசய கன்றுக்குட்டி பரிதவமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கன்றுக்குட்டியின் சடலத்தை மீட்டு பரிசோதனை செய்தனர். பிறந்த சிறிது நேரத்திலேயே  கன்றுக்குட்டி இறந்து போன செய்தி அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |