Categories
மாநில செய்திகள்

சேலத்தில் மூன்று புதிய வசதிகள்…. என்னென்ன தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சேலத்தில் கல்வி, சுகாதாரம், வர்த்தகம் என எல்லாவற்றிலும் மிகவும் பிரபலமான நகரமாக காணப்படுகிறது. எனவே அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சேலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.திரிபாதியை சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி. பார்த்திபன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் மூன்று விஷயங்கள் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, சேலம் முதல் விருத்தாசலம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவையை கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீடிக்க வேண்டும். ஏற்கனவே மீட்டர் கேஜ் ரயில் பாதை பயன்பாட்டில் இருந்தபோது சேலம் முதல் கடல் கடலூர் துறைமுக சந்திப்பு வரை ரயில் இயக்கப்பட்டு வந்தது.

அதன் பிறகு அகல பாதையாக மாற்றி 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் விருத்தாச்சலம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை கடலூர் துறைமுகம் சந்திப்பு வரை நீட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்று வலியுறுத்தினார். இரண்டாவதாக சேலம் முதல் வேளாங்கண்ணி வரை பகல் நேரம் தினசரி புதிய விரைவு ரயில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் சுற்றுலா வளர்ச்சிகளுக்கும், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை இணைக்கவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாவதாக சேலத்தில் இருந்து தாம்பரத்திற்கு பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரயில் சேவை வழங்க வேண்டும். இது விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம் வழியாக இயக்கப்பட வேண்டும். இவ்வாறு சேலம் தொகுதி மக்கள் மற்றும் தமிழக மக்களை நீண்ட கால கோரிக்கைகளை விரைவில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Categories

Tech |