Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் மெகா தடுப்பூசி முகாம்…. இதுவரை இல்லாத ஒரு ஸ்பெஷல்…. என்ன தெரியுமா?….!!!!

சேலம் மாவட்டத்தில் வருகின்ற 10-ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. அதில் 2 லட்சத்து 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை 38 லட்சத்து 33 ஆயிரத்து 280 பேர். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 27 லட்சத்து 98 ஆயிரத்து 194 பேர் இருக்கின்றனர். இவர்களில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 306 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இதில் 61%.மீதமுள்ள 10 லட்சத்து 80 ஆயிரத்து 98 பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் 61% சதவிகிதம் மீதமுள்ள 10 லட்சத்து 80 ஆயிரத்து 98 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து வருகின்ற 10ஆம் தேதி மீண்டும் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்திட திட்டமிட்டுள்ளோம். இதற்காக 50 பேருக்கு ஒருவர் என குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி முகாம் சேலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவர் வீட்டிற்கு சென்று தடுப்பூசி செலுத்துவதாக கூறியுள்ளார்.

இந்தப் பணியில் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலவிதமான பிரச்சாரங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இன்று நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |