Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் 57 சோதனை சாவடிகளில்… பறக்கும் படையினர் அதிரடி…!!

சேலம் மாவட்ட எல்லைகளில், 57 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் கண்காணிக்கபடுகிறது .

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான  தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ,வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் 33 பறக்கும்படை மற்றும் 33 கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு ,ஒவ்வொரு தொகுதிக்கும் 6 குழுக்கள் வீதம் நியமிக்கப்பட்டு ,சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாவட்டம் முழுவதிலும் 11 தற்காலிக சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு ,பணம் பரிசுப் பொருள் கொண்டுசெல்லப்படுகிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சேலம் மாவட்ட எல்லைகளை  சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களான நாமக்கல் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் சுமார் 57 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்து வருகின்றன.

Categories

Tech |