Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படுமா…..?” நோயாளிகள் எதிர்பார்ப்பு…!!!!!!

சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை வாங்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படுமா என்பதே நோயாளிகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

சேலம் அரசு மருத்துவமனையில் சேலம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாமக்கல்,தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின்றார்கள். மேலும் மருத்துவமனைக்கு தினசரி 3000 மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு மருந்து வழங்கும் கவுண்டர்கள் இரண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கவுண்டரும் இருக்கின்றது. காலை 07:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மட்டுமே மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றது.  பெரும்பாலான நேரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கவுண்டரில் மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை.

இதனால் இரண்டு கவுண்டர்களிலும் எப்பொழுதும் கூட்டமும் அதிகமாக இருக்கின்றது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கின்றது. இங்கு மணி கணக்கில் காத்திருப்பதால் வயதானவர்களும் நோயாளிகளும் சோர்வடைந்து மயக்கமடையும் நிலையும் ஏற்பட்டு வருகின்றது. ஆகையால் கூடுதல் கவுண்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நோயாளிகளின் கோரிக்கையாக இருக்கின்றது.

இது குறித்து மருத்துவர்கள் கூறியுள்ளதாவது, அரசு மருத்துவமனையில் தற்பொழுது போதுமான மருந்து, மாத்திரைகள் இருக்கின்றது. மருந்து மாத்திரைகள் வழங்க கூடுதல் கவுண்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதுதான்  மருத்துவமனையில் இல்லாத மாத்திரைகளை வெளி மார்க்கெட்டில் வாங்கி சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என என கூறியுள்ளார்கள்.

Categories

Tech |