Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி”…. போலீசார் விசாரணை….!!!!!

சேலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை-லோகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதையில் 55 வயது உடைய ஒரு நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரயில்வே போலீசார்கள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |