தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்ட பயணமாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.
இதில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட சிகிச்சை மையங்களை திறந்து வைப்பதோடு மட்டுமல்லாமல், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மேற்பார்வையிடுகிறார். இந்நிலையில் மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி அவர்களுடைய தேவைகள் மற்றும் அங்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன்.
இத்தகைய கள ஆய்வின் மூலமாக அரசு மருத்துவமனைகளின் வசதிகளை நேரடியாக அறிந்து கொள்கிறேன்; மருத்துவர்கள் – செவிலியர்களின் தேவைகளையும் கேட்டறிகிறேன்.
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு முன்மாதிரியானதாக மாற்றப்படும். pic.twitter.com/FBcciydztm
— M.K.Stalin (@mkstalin) May 20, 2021