தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்ககம் இணை இயக்குனர் அறிவித்துள்ளார்.
இந்த முகாமிற்கு வருபவர்கள் உரிய கல்விச் சான்றிதலுடன் பங்கேற்க தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முகாம் நவம்பர் 12ஆம் தேதி சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.