Categories
மாநில செய்திகள்

சேலம் உருக்காலையில்….. 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்…. திறந்து வைத்தார் முதல்வர்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா  நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் ஆக்சிஜனை விரைவில் இறக்குமதி செய்யவும், படுக்கைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக சேலம் உருக்கலையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்த நிலையில் திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |