Categories
மாநில செய்திகள்

சேலம்-கரூர் ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. புதிய நேரம் மாற்றம் அமல்….!!!!

சேலம் – கரூர் அகல ரயில் பாதையில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும்  சேலம் – கரூர் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காலத்திற்கு பின், காலை வேளை கரூர் – சேலம் ரயிலும், அதன் பின் மாலையில் சேலம் – கரூர் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த ரயிலானது, காலை 10.40 மணிக்கு சேலம் சென்றது. இதன் காரணமாக  கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் இந்த ரயிலை, காலை 9 மணிக்குள் சேலம் செல்லும் வகையில், நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என பொது மக்கள், தொடர்ந்து கோரிக்கையை  வைத்துள்ளனர். மேலும் இந்த பிரச்சினையை குறித்து, நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், நாமக்கல் எம்.பியான ராஜேஷ் குமாரிடம், ரயில் நேரத்தை மாற்றி தருமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே  இதன் அடிப்படையில், சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளை, ராஜேஷ்குமார் எம்.பி சந்தித்த பின், இந்த பிரச்சனைகளை  பற்றியும் எடுத்துரைத்துள்ளார். இதையடுத்து சேலம் கோட்ட அதிகாரிகள், உடனே இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று முதல் கரூர் – சேலம் மற்றும் சேலம் – கரூர் பாசஞ்சர் ரயில் நேரத்தினை மாற்றி, இயக்கப்படும் என ரயில்வே வாரியமானது ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி கரூர் – சேலம் ரயிலானது, காலை 7:30 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு,  நாமக்கலுக்கு  8:10 மணிக்கு வந்து சேரும்  எனவும், இதன் பின், இந்த ரயில் காலை 9.30 மணிக்கு, சேலத்துக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  மறுமார்க்கமாக, மாலை 6 மணிக்கு சேலம் – கரூர் ரயிலானது, சேலத்திலிருந்து புறப்பட்டு,  7:01 மணிக்கு நாமக்கலுக்கு வந்து சேரும். இதன் பின், இரவு 7.45 மணிக்கு கரூரை சென்றடையும்.

ஆகவே இந்நேர மாற்றத்தால், அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி செல்வோர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இதையடுத்து  இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை கொண்டு வந்த சேலம் கோட்ட அதிகாரிகளுக்கும் மற்றும்  எம்.பி ராஜேஸ்குமாருக்கும், நாமக்கல் மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பொது மக்கள், தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |