Categories
மாநில செய்திகள்

சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்…!!!!

கோவை – திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் மற்றும் கோவை – சேலம் பேசஞ்சர் போன்ற ரயில்கள் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த சமயத்தில் 18 நாட்களுக்கு உள்ளூர் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் பாசஞ்சர் ரயில் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ரயில்வே நிர்வாகம் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு சேலம் – கோவை பாசஞ்சர் ரயிலை தீபாவளி வரை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |