Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் சுகனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்”…. யாகசாலை அமைக்கும் பணி தீவிரம்….!!!!!!

சேலம் சுகனேஸ்வரர் கோவிலில் வருகின்ற 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது.

சேலம் மாநகரில் பழமை வாய்ந்த சுகனேஷ்வரர் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு சென்ற 2018 ஆம் வருடம் பாலாயம் செய்யப்பட்டது. இதை அடுத்து சென்ற நான்கு வருடங்களாக கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்பொழுது அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் இருப்பதால் அடுத்த மாதம் செப்டம்பர் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இதனால் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை பல பூஜைகள் நடைபெற இருக்கின்றது. செப்டம்பர் 7ஆம் தேதி காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெறுகின்றது. 11.15 மணிக்கு சிவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதணை நடைபெற இருக்கின்றது. மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம் திபாராதணை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |