தமிழகத்தில் தென்னக ரயில்வே சார்பாக இயக்கப்பட்டு வரும் பல்வேறு ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்து வருகிறது. சென்ற இரு வருடங்களாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த சமயத்திலும் ரயில்வேதுறை தொடர்ந்து தங்களின் பங்கை அளித்து வந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரயில் சேவைகள் விமர்சையாக நடந்து வருகிறது. இதையடுத்து சேலம் மாவட்டத்திலும் இச்சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தின்கீழ் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதில் சேலம் மற்றும் சென்னை மக்களை இணைக்கும் அடிப்படையிலான அதி விரைவு ரயில் ஒன்றும் இருக்கிறது. இந்த ரயில் சேலம்- விருத்தாசலம் இடையே அகல ரயில்பாதை போடப்பட்டதையடுத்து விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. எனினும் இந்த ரயில் இரவுநேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வரையிலும் செல்லும் அதி விரைவு ரயில் (ரயில் எண் 22154) புதிய ரயில்வே அட்டவணையின் அடிப்படையில் 10 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ரயிலை பகலிலும் இயக்க வேண்டும் என வெகு நாளாக பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.