சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மொத்தம் 14 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.