Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் தெற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாநகராட்சி பகுதியை கொண்ட தொகுதியே சேலம் தெற்கு. இங்கு கைத்தறி, பாட்டுத்தறி, விசைத்தறி, ஜவுளி ஏற்றுமதி, சாய தொழிற்சாலை, வெள்ளி மற்றும் தங்க நகை ஆபரணம் தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக இருந்து வருகின்றன. வெளிமாநிலங்களில் பரவலான வரவேற்பைப் பெற்ற சேலம் வெண்பட்டு வேஷ்டிகளுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவில் மிகுந்த புகழ் பெற்றதாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே சேலம் நகர் மற்றும் புறநகர் என இருந்த தொகுதிகள், அதன் பிறகு சேலம் 1 மற்றும் 2 என மாறியது. 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பின் போது சேலம் ஒன்று தொகுதியின் பெயர் சேலம் தெற்கு என ஆனது. இதுவரை காங்கிரஸ் 4 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போது எம்எல்ஏவாக அதிமுகவில் ஏ.பி. சக்திவேல் உள்ளார். சேலம் தெற்கு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,59,229 ஆகும்.

குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு தேங்குவதால் சுகாதாரம் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. சாக்கடை வசதி முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் உள்ளது. குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்க படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெசவாளர்கள் அதிகம் உள்ளதால் இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.

கூட்டுறவு சங்கங்கள் முறையாக இயங்காததால் பாட்டுத்தறி நெசவாளர்களுக்கு பட்டு பாவு நூல் கிடைக்காமல் வேலை இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு முழுமையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் சீரமைக்கபடாமலும், பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |