Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே….! இன்று முதல் இது கட்டாயம்….  இல்லையெனில் வாகனம் பறிக்கப்படும்…. காவல்துறை எச்சரிக்கை….!!!!

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு பலமுறை இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றன. அவ்வபோது காவல்துறையினர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சேலம் மாநகர பகுதிகளில் ஹெல்மெட் கட்டாய சட்டம் அமல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாநகராட்சி பகுதியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்றும், வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

நாளை முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பின்னர் நீதிமன்றத்தின் மூலம் அபராதம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா, ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம், சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மட்டும் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களின் வாகனம் பறிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |