Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே…. கந்து வட்டி கொடுமையா? கவலை வேண்டாம்….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!!

தமிழகத்தில் 2003 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டுவரப்பட்ட கந்துவட்டி தடை சட்டத்திற்கு அதித வட்டி வசூல் தடைச் சட்டம் என்று பெயர். இந்த தடை சட்டம் பல விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது வியாபார நோக்கில் வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றமாகும். தனி உபயோகத்திற்காக 12 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது குற்றம்.அதீத வட்டி வசூலிப்பவர்களுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வெளியிட்டுள்ள செய்தியில், சேலம் மாவட்ட பகுதிகளில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டோர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அல்லது 9498100970 , 9629390203 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |