Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மக்களே…. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம்…. மேற்பார்வை பொறியாளரின் முக்கிய அறிவிப்பு…!!!

சேலம் மாவட்ட மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த 28-ஆம் தேதி முதல் வீடு, விசைத்தறி, கைத்தறி குடிசை, விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து தினங்களிலும் காலை 10:30 மணியிலிருந்து மாலை 5:15 மணி வரை நடைபெறும். எனவே மின் நுகர்வோர் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |