சேலம் மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சேலம் மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று இரவு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் மோகன் பாபு சேலம் டவுன் காவல் நிலையத்திற்கும் இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரராஜன் செவ்வாய் பேட்டைக்கும் செல்வராஜ் கன்னங்குறிச்சிக்கும் சசிகலா இரும்பாலைக்கும் விக்னேஸ்வரன் கருப்பூருக்கும் விஜயேந்திரன் அழகாபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அன்னதானப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.