தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று முதன்மை தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் பெயர், முகவரி, கல்வி தகுதி மற்றும் அலைபேசி எண் ஆகிய விவரங்களை நவம்பர் 21ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் [email protected]என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.