சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக செகந்திராபாத் மற்றும் கோட்டையம் சிறப்பு ரயில் (07125) வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு செதந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா,காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக நவம்பர் 28ஆம் தேதி மதியம் 12.22 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்தில் இருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை,பாலக்காடு மற்றும் எர்ணாகுளம் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.