Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் விவசாயிகளுக்கு…. கலெக்டர் கார்மேகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை…..!!!!

சேலம் மாவட்டம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டத்தில் 280 மெட்ரிக் டன் பச்சைப்பயறு, 250 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இதில் பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 77.55 ரூபாய், உளுந்து விலை 66 ரூபாய் வீதம் வருகிற டிச., 29 வரை கொள்முதல் செய்யப்படும். அதற்குரிய கிரையத் தொகையானது விவசாயி வங்கிக்கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கிக்கணக்கு எண் போன்ற விபரத்துடன் சேலம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை, 98947 – 76675, 90803 -23535, மேச்சேரி விற்பனை கூடத்தை 97502 – 72977 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொள்ளலாம். அத்துடன் வேளாண் துணை இயக்குனரை, 0427 – 906927, 93642 -02355 என்ற எண்ணில் அழைக்கலாம்.

Categories

Tech |