Categories
தேசிய செய்திகள்

சேலை கட்டிட்டு வந்தால்…. உள்ளே அனுமதி கிடையாது… உணவு விடுதியின் புதிய ரூல்… மகளிர் ஆணையம் கொந்தளிப்பு…!!!!

டெல்லியில் உணவு விடுதி ஒன்றில் சேலை அணிந்து சென்ற பெண்ணிற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையம் உணவு விடுதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சேலை அணிந்து சென்ற பெண்ணை தாங்கள் பின்பற்றும் ஸ்மார்ட் உடை கொள்கையில் சேலை இல்லை என்று கூறி உணவு விடுதி நிர்வாகம் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது. மேலும் அவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அந்த பெண் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோவானது அனைத்து தரப்பினரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. சேலை அணிந்தால் உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்த உணவு விடுதிக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

அந்த வகையில் தேசிய மகளிர் ஆணையம் உணவு விடுதிக்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு இயக்குனருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் சேலை அணிந்து வந்தால் பெண் ஒருவரை உணவுகள் அனுமதிக்காத இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கும் தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |