சட்டத்தை மீறி நடந்த சேவல் சண்டையை தடுக்க சென்ற காவலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
பிலிப்பைன்ஸ் நாட்டில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் காவலர் ஒருவர் விசாரிக்க சென்றுள்ளார். கிறிஸ்டின் என்ற காவலர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த ஒரு சேவலை பிடித்ததோடு சண்டை நடந்ததற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி கிறிஸ்டின் தொடையில் வெட்டி உள்ளது.
அப்போது முக்கிய ரத்தக்குழாய் வெட்டப்பட்டதால் அதிக அளவு ரத்தம் வெளியேறியது. இதனால் கிறிஸ்டின் பரிதாபமாக உயிர் இழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதோடு அவர்களிடம் இருந்து 7 சண்டை சேவல்கள் இரண்டு ஜோடி கத்திகளும் பந்தயம் கட்டிய பணமும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.