கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவில் அகமத் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இம்ரான் என்ற மகன் உள்ளார். அவர் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகின்றார். மேலும் சண்டைக் கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறார். அதன்படி சண்டைக்கோழி பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த மார்கோ என்பவரிடம் சண்டை கோழியை வாங்கியுள்ளார்.
அந்த கோழியுடன் ஆந்திர மாநிலத்தில் நடந்த பந்தயப் போட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் கோழி சரியாக பங்கேற்கவில்லை. அதனால் இம்ரான் மார்கோ மீது ஆத்திரம் அடைந்தார். நீங்கள் தந்த கோழி சரியாக பங்கேற்கவில்லை என்று கூறி மார்கோ விடம் சண்டை போட்டுள்ளார். அதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மார்கோ மற்றும் அவரது மகன் குல்ஃபி என்கின்ற மணிமாறன் இருவரும் இம்ரானை கத்தியால் குத்தினர். அதனை தடுக்க வந்த இம்ரானின் அண்ணன் சலாவுதீன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது.
இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். அதன்பிறகு மார்கோ மற்றும் அவரது மகன் குல்பி அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து கத்திக்குத்து பட்ட இருவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இம்ரான் உயிரிழந்துவிட்டார். அலாவுதீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள மார்கோ மற்றும் குல்பி இருவரையும் தேடி வருகின்றனர்.