போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் நடந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ நாட்டின் போதை பொருள் கடத்தல், எரிபொருள் திருடுதல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போதைப்பொருள் கும்பல்களுக்குள் அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த போதைப் பொருள் கும்பலில் தொடர்புடையவர்கள் 3.4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் குற்றவாளியாகவும் உள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த மாதத்தில் மெக்சிகோ நாட்டில் உள்ள அட்லிக்ஸ்கோ என்ற இடத்தில் நேற்று 9 பேர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் போதை பொருள் கும்பல்களுக்கு ஏற்பட்ட மோதலினால் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இடத்தில் அடிக்கடி சேவல் பந்தயத்திற்கு சூதாட்டம் நடந்ததாகவும் அதில் ஏற்பட்ட மோதலினால் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதில் 3 பெண்கள் உட்பட 16 ஆண்களின் உடல்கள் கிடந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மிச்சோவாகன் பகுதியின் பொது பாதுகாப்பு செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் “வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்” என கூறியுள்ளது.