Categories
தேசிய செய்திகள்

சேவிங்ஸ் அக்கவுண்டில் இருக்கும்…. பணத்தை வைத்தே கடன் பெற…. எஸ்பிஐ-யின் சூப்பர் திட்டம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும்  பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நல்ல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டியானது 2.70% குறைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் வேறு முதலீடுகளை தேடி வருகின்றனர். அவர்களுக்காக  ஸ்பிஐ வங்கி சேவிங்ஸ் பிளஸ் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கணக்கு Multi Option Deposit திட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்கும் பணம் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு தானாகவே மாற்றப்படும். இந்த டெபாசிட்டுக்கான காலம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் ஆகும். இந்த டெபாசிட்டில் இருக்கும் பணத்தை வைத்தும் கடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த  கணக்கை திறக்க ஆதார் உள்ளிட்ட KYC ஆவணங்கள் தேவை. தனியாகவும், கூட்டாகவும் (Joint account) கணக்கை திறந்துகொள்ளலாம்.
ஏடிஎம் கார்டு வழங்கப்படும். இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வசதிகள்.

Categories

Tech |