Categories
தேசிய செய்திகள்

சேவிங்ஸ் அக்கவுண்டுகளுக்கு ஆப்பு.. குறைக்கப்பட்ட வட்டி… வெளியான அறிவிப்பு…!!!

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி குறைத்துள்ளது.

இந்திய தபால் துறையால் நடத்தப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வட்டி மற்றும் சேவைகளுக்கான கட்டணத்தை திருத்தி உள்ளது. இதில் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியை குறைத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சேவை வழங்கும் டோர்ஸ்டெப் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதலில் டோர்ஸ்டெப் சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சேவைகள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 20 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் சேமிப்பு கணக்குகளுக்கு வட்டியையும் குறைத்துள்ளது. தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் இருக்கும் கணக்குகளுக்கு 2.75 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இந்த வட்டி 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் ரூபாய் வரை இருக்கும் கணக்குகளில் எந்த மாற்றமும் கிடையாது.

Categories

Tech |