ஐடிஎஃப்சி வங்கியானது சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
சமீபகாலமாக பல்வேறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்ற நிலையில் தற்போது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றது. இதுவரை 5 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்ட நிலையில் தற்போது உயர்த்தி வருகின்ற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 6 சதவீதம் வரை வட்டி விகிதம் பெற முடியும் என வங்கி அறிவித்து இருக்கின்றது.
ரிசர்வ் வங்கி விதிமுறையின்படி வட்டி தொகையானது தினசரி பேலன்ஸ் அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்டு, மாதம்தோறும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுமாம். புதிய வட்டி விகிதம்படி பேலன்ஸ் தொகை அடிப்படையில் 1லட்சம் ரூபாய் வரை இருந்தால் 4 சதவீதமும் 10 லட்சம் ரூபாய் வரை இருந்தால் 4.50 சதவீதமும் 20 லட்சம் ரூபாய் வரை இருந்தால் 5 சதவீதமும் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தால் 6 சதவீதமும் 100 கோடி ரூபாய் வரை இருந்தால் 5 சதவீதமும் 200 கோடி ரூபாய் வரை இருந்தால் 4.50 சதவீதமும் 200 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் 3.50 சதவீதமும் வட்டி வழங்கப்படும்.