அதிக வட்டி தரும் வங்கி எது..? இதனால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்..? என பல சந்தேகங்கள் நமக்கு இருக்கும். சேவிங்க்ஸ் அக்கவுண்டிலேயே அதிக வட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் ஒரு வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசிப்போம் பொதுத்துறை அல்லது தனியார் வங்கி எது உங்கள் தேர்வாக இருந்தாலும் வட்டி என்பது தான் மிகவும் முக்கியம்.
நாம் டெபாசிட் செய்யும் தொகையானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் வட்டியும் லாபமாக இருக்க வேண்டும். பெரிய பெரிய வங்கிகளைக் காட்டிலும் சிறிய வங்கிகளில் பெரும்பாலும் சேவிங்ஸ் அகவுண்டுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இதை நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். இனி குழப்பம் வேண்டாம். பொதுவாகவே சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி தரும் வங்கிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
YES பேங்க்:
இங்கு சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி 5.25% . மினிமம் பேலன்ஸ் ரூ.10,000 முதல் ரூ.25,000 மட்டுமே.
RBL பேங்க்:
சேமிப்பு கணக்குகளுக்கு 6.25% வரையில் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ.2500 – 5000 ஆகும்.
டிசிபி பேங்க்:
டிசிபி வங்கியில் வட்டி விகிதம் 6.75% மற்றும் மினிமம் பேலன்ஸ் ரூ.2500 முதல் ரூ.5000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பந்தன் பேங்க்
பந்தன் வங்கியில் 6% வரை சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் ரூ 5000 மட்டுமே.
புதிய வங்கி கணக்கு திறக்க நினத்தீர்கள் என்றால் இது போன்ற அதிக வட்டி தரும் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குகள்.