Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சைகை காட்டாமல் திரும்பிய நபர்…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. உயிர் தப்பிய மாணவ-மாணவிகள்….!!!

கல்லூரி பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூரில் மூகாம்பிகை இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி பேருந்து பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 40 பேருடன் திருச்சியில் இருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணதாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மண்டையூர் பிரிவு ரோடு அருகே சென்றபோது சைக்கிளில் சென்ற ஒருவர் சைகை எதுவும் காட்டாமல் சாலையை கடக்க முயன்றதால் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக கல்லூரி பேருந்து ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த மழைநீர் வடிகால் பாலத்தின் கட்டையை உடைத்து கொண்டு 7 அடி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவ மாணவிகளும், பேராசிரியர்களும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாதூரியமாக கண்ணதாசன் செயல்பட்டதால் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும் மாற்று பேருந்து மூலம் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |