Categories
உலக செய்திகள்

“சைக்கிளிலிருந்து கீழே விழுந்த பிரபல நாட்டு அதிபர்”…. பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்க நாட்டு அதிபர் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலவெயர் மாகாணத்தில் அமைந்திருக்கும் தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது மனைவி போன்றோருடன் ஜோ பைடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தி இருக்கின்றார். அப்போது எதிர் பாரதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் உடனடியாக எழுத ஜோ பைடன் தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது பற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜோ பைடனுக்கு  காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்தவித மருத்துவ கவனிப்பும் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |