பிரதமர் மோடியின் தொகுதியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை சைக்கிளில் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், சாவுகாகத் பெண்கள் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை சைக்கிளில் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பான சூழலில் கையாளவேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.