Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிளில் கல்லூரிக்கு சென்ற மாணவி….. வாலிபர் செய்த காரியம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி சைக்கிளில் சி.பி ராமசாமி சாலை வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் மனைவி சத்தம் போட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்த தனுஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |