டிப்பர் லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காட்டுநாயக்கன் தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் நாகப்பட்டினத்திலுள்ள ஒரு பள்ளியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்திரா முதலாவது கடற்கரை சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இந்திரா, படுகாயமடைந்துள்ளார். உடனே அருகிலிருந்தவர்கள் இந்திராவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர்.