Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரிடம் வழிப்பறி… போலீஸ் தீவிர விசாரணை..!!

சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கௌதம் கார்த்திகிடம் செல்போனை பறித்து சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடல், இருட்டுஅறையில்முரட்டுகுத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கௌதம் கார்த்திக் தற்போது செல்லப்பிள்ளை, நவரசம் உள்ளிட்ட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக் அதிகாலை மெரினா கடற்கரை வழியாக கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது ராதாகிருஷ்ணன் சாலை – டிடிகே சாலை சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு, அவரிடமிருந்து இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து கௌதம் கார்த்திக் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து செல்போனை திருடி சென்றவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். வழிப்பறி கொள்ளையர்கள் கீழே தள்ளி தாக்கியதில் காயமடைந்த கௌதம் கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Categories

Tech |