Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… அரசு பேருந்து ஓட்டுநர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவைகாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் குமரன்(10). இவன்  அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்துள்ளான். இந்நிலையில் நேற்று காலையில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த குமரனின் மிதிவண்டி  மீது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக  மோதியது.

இதில் படலத்த காயம் அடைந்த குமரனை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குமரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான் . தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுனர் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |