சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி கடந்த 24ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் சைக்கிள் சென்ற போது வன்கொடுமைக்கு ஆளானதாக அவரது தோழி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சைக்கிளில் சென்ற மாணவியை இளைஞர் ஒருவர் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து பாலில் ரீதியாக தாக்கி உள்ளதாகவும், அந்த நபரை எதிர்த்து போராடி மாணவி காயங்களுடன் விடுதிக்கு தப்பி ஓடி வந்ததாகவும் அவ்வாறு தப்பி ஓடி வந்த போது கூட அங்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளிக்க முன்வரவில்லை. இதனையடுத்து ஐ.ஐ.டி. நிர்வாக தாமதமாக முன்வந்து விசாரணை நடத்தியது. ஐ.ஐ.டி.யில் இரவு பணியில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் 35 பேரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கு பெரிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் பணியாற்றி தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சி.சி.டிவி. கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் மாணவியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டவரை அடையாளம் காண முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஐ.ஐ.டி.யில் தலைமை பாதுகாப்பு அதிகாரி வேலு சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேண்டினில் ஜூஸ் மாஸ்டராக வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தனகுமார்(24) என்பவர்தான் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து அவரை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் , பெண் மானபங்கப்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.